• Fri. Apr 26th, 2024

மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி 9:30 மணி 1:30 மணி 5 மணி என நான்கு முறை பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன அவ்வாறு இயக்கப்பட்டு வரும் பேருந்து கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வளைவுகளில் மேடான பகுதிகளில் பயணிகளை வைத்து இயக்க முடியாமல் இழுவை திறன் குறைந்து பேருந்தில் முழுவதும் புகை தள்ளியவாறு உள்ளது.காலை மாலை நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர் மின்வாரிய ஊழியர்கள் என தினம்தோறும் இந்த பேருந்தை நம்பியே பயணித்து வருகின்றன. வழக்கம்போல் கோவையில் இருந்து மஞ்சூர் நோக்கி வந்த 9 மணி பேருந்து முதல் வளைவு முதல்இழுவை திறன் குறைபாட்டால் 15 நிமிடத்தில் கடக்க வேண்டிய இடங்களை 45 முதல் ஒரு மணி நேரம் வரை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது ஓணிகண்டி பகுதியில் பேருந்து பழுதாகி நின்றதால் பேருந்தில் பயணித்த பயணிகளை இறங்கி நடக்க வைத்தனர். பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் மிகவும் சிரமப்பட்டு தினந்தோறும் வாகனங்களை இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் பேருந்து என்பதால் நல்ல நிலையில் இயங்கக்கூடிய பேருந்து சேவையை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அவ்வப்போது சாலையில் சுற்றித் திரியும் யானைகள் திடீரென பேருந்து பயணிகளுடன் பழுதாகி நின்றால் பயணிகளின் கதி என்னவாகும் என்பதை கருத்தில் கொண்டு பேருந்தை இயக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *