• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

பேருந்து நிலையத்தில் பயணிகள் குழப்பம்..,

ByKalamegam Viswanathan

Aug 17, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலைய பயன்பாட்டில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் பேருந்து நிலையத்திற்குள் வரும் ஒரு சில பேருந்துகளும் எங்கே செல்கின்றன என போர்டை மாற்றாமல் போர்டை கழட்டி பேருந்து உள் பகுதியில் வைத்து விட்டு வட்ட பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் சென்ற பின்பு எடுத்து மாற்றுவதால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்படுவதாக கூறுகின்றனர்.

குறிப்பாக மாட்டுத்தாவணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு வருகிறது மாட்டுத்தாவணி பெரியார் பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் போன்றவற்றிலிருந்து சோழவந்தான் பேருந்து நிலையம் வரும்.

பேருந்துகள் சோழவந்தான் பேருந்து நிறுத்தத்தில் இருந்து எங்கு செல்கிறது என்ற போர்டை மாற்றாமல் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி விடுகின்றனர். பின்பு பேருந்தைஎடுத்து வட்ட பிள்ளையார் கோவில் வரை சென்ற பிறகுசெல்ல வேண்டிய ஊர்களுக்கான போர்டை எடுத்து மாற்றுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் மாட்டுத்தாவணி பகுதி அண்ணா பேருந்து நிலையப் பகுதி கோரிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய பயணிகள் பெரியார் பேருந்து நிலையம் செல்ல வேண்டிய பயணிகள் ஆகியோர் பேருந்து எந்த வழித்தடத்தில் செல்கிறது என்ற விவரம் தெரியாத நிலையில் பேருந்து நிலையத்திலேயே பல மணி நேரம் காத்திருப்பதாக கூறுகின்றனர்.

ஆகையால் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக நேரக்காப்பாளர் ஒருவரை நியமித்து பேருந்துகளை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.