• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

குறுமைய விளையாட்டு போட்டி ஆர்வமுடன் பங்கேற்பு.,

BySeenu

Aug 22, 2025

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக 66 வது குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் மண்டல அளவிலான அ குறுமைய விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.

கோவை பந்தயசாலை சி.எஸ்.ஐ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைத்து நடத்திய இதில்,கோவை நகர பகுதிக்கு உட்பட்ட சுமார் 40 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள போட்டிகள் சி.எஸ்.ஐ.கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் வழிகாட்டுதலின்படி , திருமண்டல செயலாளர் பிரின்ஸ் கால்வின் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

விழாவில் சி்.எஸ்.ஐ மெட்ரிக் பள்ளி முதல்வர் குளோரி லதா டேவிட் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதில்,14,17,19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் கைப்பந்து,கால்பந்து,கூடைப்பந்து,
டேபிள் டென்னிஸ்,போன்ற விளையாட்டு போட்டிகளும், ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்,குண்டு எறிதல், உள்ளிட்ட தடகள போட்டிகளும் நடைபெற்றன..

இதில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…

முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில்,தென்னிந்திய திருச்சபை கோவை உப தலைவர் டேவிட் பர்ணபாஸ்,பொருளாளர் அமிர்தம் , கோவை ஏரியா தலைவர் ஆயர் ராஜா, திருச்சி சாலை ஆயர்கள் ராஜேந்திர குமார், சற்குணம், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.