• Sat. Nov 21st, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி…

BySeenu

Nov 21, 2026

கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் அருகே, இன்ஸ்டிடியூட் ஆஃப் தேன்சிட்டு அமைப்பினர் சார்பில், மத்திய அரசின் EPR சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவுடன் கொள்கை ரீதியான கருத்து வேறுபாடு காரணமாகவே கூட்டணியில் இருந்து வெளியேறியதாகத் தெரிவித்தார். பிரதமர் மோடி தனக்கு பல வாய்ப்புகளை வழங்கியபோதும், தவறான முடிவுகளை எதிர்த்து கருத்து தெரிவித்து வெளியேறியதாக கூறினார்.

முதல்வர் விஜய் தன்னை அண்ணன் என்று அழைத்ததன் காரணமாகவே அவரைச் சந்தித்ததாகவும், விஜய் நேர்மையான ஆட்சியை நடத்தி வருகிறார் என்றும், ஊழல்வாதிகள் யாரும் அவரை நெருங்க முடியாது என்றும் பாராட்டினார்.

மேலும், சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்கத் தான் தயாராக இருப்பதாகவும், திமுக அதற்குத் தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். திருப்பரங்குன்றம் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட அவர், தூத்துக்குடியில் சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

வடிவேலுவுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய வைகோ, அவரும் ஒரு தமிழர் என்றும், அவரது நகைச்சுவையால்தான் திரைப்படங்கள் வெற்றி பெற்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும், அக்கட்சியை அழிக்க கருணாநிதியே முயற்சி செய்ததாகவும் கூறினார். மேகதாது அணை விவகாரத்தில் முதலில் போராடியவன் தான் என்றும், தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்வதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்றும் தெரிவித்தார்.