• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் துணை ராணுவம் அணிவகுப்பு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு துணை ராணுவம் அணிவகுப்பு சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ் பெக்டர் கணேசன் முன்னிலையில் நடந்தது.

இந்த அணி வகுப்பில் துணை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் போலீசார் வாடிப்பட்டி காவல் நிலையம் தொடங்கி தாதம்பட்டி மந்தை பஸ் நிலையம் லாலா பஜார் போடிநாயக்கன்பட்டி பிரிவு சந்தை பாலம் பேரூராட்சி அலுவலகம் ராமநாயக்கன்பட்டி பிரிவு குலசேகரன்கோட்டை பிரிவு என மதுரை திண்டுக்கல் நகர்ப்புற சாலையில் ஆரோக்கிய அன்னை திருத்தலம் வரை சென்றனர்.