புதுச்சேரி அரசு சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
இதன்படி வார இறுதி நாட்களில் புதுச்சேரியில் கடற்கரையில் இன்னிசை கச்சேரி, பழைய திரைப்படங்கள் திரையிடுதல், ஆணழகன் போட்டி, பட்டிமன்றம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில் மன அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சீனா, ரஷ்யா, போன்ற உலக நாடுகளில் நடத்தப்படும் காகித விளக்கு திருவிழா புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினம் ரூபி கடற்கரையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரம் கணக்கானோர் திரண்டு காகித விளக்குகளை வானில் பறக்கவிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடியும் செல்பி எடுத்தும் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்.