திண்டுக்கல் அருகே பெட்ரோல் பங்க் வாயிலில் தீப்பிடித்து பற்றி எரிந்ல காரால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் எதிரே பாரத் பெட்ரோல் பங்க் வாயிலில் ஆம்னி வேன் தீப்பிடித்து பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. பொதுமக்கள் அங்கும், இங்கும் சிதறி ஓடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




