விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 30-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 7-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, இன்று இரவு ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலதாளம் முழங்க ரத வீதியில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. தில்லானா சித்தர்கள் அம்மன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டினர் செய்துள்ளனர்.