• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஊராட்சி மன்ற தலைவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ByP.Thangapandi

Nov 4, 2024

உசிலம்பட்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி, கொடைக்கானல் – பூம்பாறை ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் – பூம்பாறை கிராம ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் கோபால கிருஷ்ணன். இன்று தனது நண்பரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் – வீரபாண்டியைச் சேர்ந்த சங்கிலி என்பவரது வீட்டிற்கு தீபாவளியை கொண்டாட நண்பர்களுடன் வந்துள்ளார்.

சங்கிலியின் தோட்டத்து கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது நீச்சல் தெரியாத கோபால கிருஷ்ணன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் வாலாந்தூர் காவல் நிலைய போலீசார், சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் கோபல கிருஷ்ணனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதி மட்டுமல்லாது கொடைக்கானல் பூம்பாறை ஊராட்சி பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.