சென்னை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான R.கபாலிஸ்வரன் ஏற்பாட்டில் மடிப்பாக்கம் கூட்ரோடு பகுதிகளில் நாடே தூற்றும் நான்கு ஆண்டு விடியா ஸ்டாலின் ஆட்சியின் அவலங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்களின் ஆட்சியில் நடைபெற்ற நலத்திட்டங்கள் குறித்தும் மக்கள் பயன்பெற்ற திட்டங்கள் குறித்தும் தற்போது நடந்து வரும் விடியா திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் எடுத்துரைத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என துண்டு பிரசுரங்கள் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதில் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே பி கந்தன் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 187 வது வட்டச் செயலாளர். தியாகராஜன். கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி மணிமாறன் கழக ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் பி.எம். ராம்தாஸ் மூவரசம்பட்டு பத்மநாபன் பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் கழகத் தோழர்கள் மகளிர் அமைப்புகள் கலந்து கொண்டு இந்த பொது மக்களுக்கு கை பிரதியை வழங்கினார்கள்.