• Mon. May 13th, 2024

Trending

காசுக்காக இப்படியா?.. வைகை அணை அருகே அதிரடி காட்டிய அதிகாரிகள்!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் வைகை அணை பகுதிகளில் மீன்கள் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில் குளிர்சாதன பெட்டிகளில் பல நாட்கள் வைத்து அதை மக்களுக்கு விற்பனை செய்வதாக நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து ஆய்வு செய்து…

எங்கேயும் தப்பிச்சி ஓட மாட்டேன்… ஒரே போடாய் போட்ட பிரேமலதா!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி விண்ணப்பித்தார். பாஸ்போர்ட் புதுப்பித்து வழங்கப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டு திருநெல்வேலியில் பதிவான வழக்கை மறைத்ததாக கூறி, அவரது பாஸ்போர்ட் திரும்பப் பெறப்பட்டது. சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய்…

கனமழையால் டெல்லியில் உருவான திடீர் வாட்டர் ஃபால்ஸ்!

டெல்லியில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் டெல்லியில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், டெல்லியில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, நீண்ட…

திருமண மண்டபங்களில் நடந்த திருமணத்திற்கு நிதியுதவி கிடையாது – தமிழக அரசு

திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் அனைத்து திருமண நிதியுதவி திட்டங்களின்…

இடியாப்ப சிக்கலில் நாய் சேகர்

வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தின் தலைப்புக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையில் மீண்டும் நடிக்க உள்ளார். வடிவேலுவின் ‘இம்சை அரசன்’ பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து சுராஜ் இயக்கத்தில்…

எச்சரிக்கை.. இந்த 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்பிருப்பதாகவும்; ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை,…

போட்டியின்றி தேர்வானார் எம்.எம் அப்துல்லா

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு திமுகவின் எம்.எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வாகிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்துக்கு மட்டும் செப்.13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக…

நாளை நல்லடக்கம்… தேனி கொண்டு செல்லப்பட்டது ஓபிஎஸ் மனைவி உடல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக குடல் இறக்க பிரச்சனை காரணமாக பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை…

வேலப்பர் கோவிலை எட்டாவது படை வீடாக்குமா?.. திமுக அரசு!

குன்று இருக்கும் இடமெல்லாம், குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை. இவ்வாறு வேலோடும், மயிலோடும் அருள் பாலிக்கும் ,தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளன. சூரனை வென்ற வீரனாய் ,வள்ளி மணாளனாய், தெய்வானை…

3 ஆம் பாலினத்தவரை துன்புறுத்தினால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மூன்றாம் பாலினத்தவர் மற்றும், ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இரு பெண்கள்,  நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால்,…