• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 18, 2025

நிழல்கள் நினைவுகள் ஒரே வகையான நிறத்தால் ஆனது .
அது உங்களைத் தவிர வேறு ஒன்றையும் பிரதிபலிக்காது.
நிதானமாக இருந்தால், நிஜத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.

கீரிடங்கள் சூடிக் கொள்வதல்ல..
காலத்தால் நமக்கு சூட்டப்படுவது!

தன் குடிகளுக்குள் மற்ற எல்லாரையும் விட
யார் மேலானவரோ அவரைக் கௌரவிக்க வேண்டும் என்று ஓர் அரசனுக்கு விருப்பம். அதற்காக அவன் சபை ஒன்று கூட்டினான்.

பல துறைகளில் பிரசித்தி பெற்றவர்கள் அங்கே வந்திருந்தார்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் அரசன் விசாரித்துக் கொண்டே வந்தான்.

முதலில் ஒரு கனவான் வந்து நின்றார்.”இவர் யார்?” என்று அரசன் கேட்டான்.

“இவர் பெரிய வியாபாரி. இவர் சம்பாதித்திருக்கிற அளவு சொத்து இந்த உலகத்தில் வேறு யாருமே சம்பாதிக்கவில்லை” என்று அவரை மந்திரி பிரமாதமாகப் புகழ்ந்தார்.

“சரி அடுத்தபடி யார்?”

பிறகு ஒருவர் வந்து நின்றார்.

”இவரிடத்தில் என்ன சிறப்பு?”

“இவரைப்போல் சட்ட நுணுக்கம் தெரிந்தவர் இந்தப் பூலோகத்திலே வேறு எவரும் இல்லை” என்று அவரை மந்திரி புகழ்ந்து போற்றினார்.

“சரி அடுத்தது யார்?”

அப்போது மற்றொருவர் வந்து நின்றார்.

”இவர் சாட்சாத் தன்வந்திரியின் அவதாரம். இவர் தொட்டுத் தேறாத நோயாளியே இல்லை” என்று அவரைப்பற்றி சிலாக்கியமாகக் கூறினார் மந்திரி.

கடைசியாக ஒரு கிழவர் மெலிந்த உடம்பும் கிழிந்த ஆடையுமாகத் தள்ளாடிக் கொண்டே அரசன் எதிரில் வந்து நின்றார்.

“இவர் யார்?” என்று கேட்டான் அரசன்.

“இப்போது வந்தார்களே அந்த மூன்று பேருக்கும் கல்வி போதித்த உபாத்தியாயர் இவர்” என்று பதில் சொன்னார் மந்திரி.
சபையில் கூடியிருந்த மக்கள் எல்லோரும் குதூகல ஆரவாரம் செய்தார்கள்.

உடனே அரசன் தன் சிம்மாசனத்திலிருந்து இறங்கி அவரை வணங்கி மரியாதை செய்து கௌரவித்தான்.

நீதி:
“குருவே தெய்வம்.
குருவை வணங்க வேண்டும்;
மதிக்க வேண்டும்.”

“குரு வில்லா வித்தை பாழ்”
“கடவுளும் குருவும் ஒருவர்தான்”
“மாதா, பிதா, குரு தெய்வம்”

“குரு இல்லார்க்கு
வித்தையுமில்லை,
முதல் இல்லார்க்கு
லாபமும் இல்லை”
“எழுத்தறிவித்தவன் இறைவனாகும்”

” நீங்கள் நேர்நிலையாக இருந்தால், தடைகளுக்குப் பதிலாக வாய்ப்புகளைப் பார்ப்பீர்கள்…”

எனக்கு புடிச்சது உங்களுக்கு புடிக்காது உங்களுக்கு புடிச்சது எனக்கு புடிக்காது.
அதனால நமக்கு புடிச்ச மாதிரி நாம வாழ்ந்துட்டு போயிடனும்.