• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jul 17, 2023

சிந்தனைத்துளிகள்

ஒரு பெண்ணோட கனவில் ஒரு தேவதை வந்தது. உனக்கு என்ன வேணுமோ? அதை என்னிடம் கேள் நான் அதைத் தருவேன் என்று சொன்னது. அவள் சந்தோஷமாக கேட்க ஆரம்பித்தாள்.
“என்னுடைய கணவரின் கண்கள் எப்பொழுதும் என்னை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்”.
தேவதை அதுக்கு அப்புறம் என்ன வேணும்? என கேட்டது. அதற்கு அவள் “நான் பக்கத்தில் இல்லாமல் அவர் தூங்கவே கூடாது” என்றுதேவதை வேறு என்ன வேண்டும் ?எனக் கேட்டது. அதற்கு அவள்
“என் கணவர் காலையில் எழுந்ததும் என் முகத்தை தான் முதலில் பார்க்க வேண்டும்” என சொன்னாள்.தேவதை அவளிடம் கேட்டது இன்னும் வேறு ஏதும் ஆசை இருக்கிறதா? என்று அதற்கு அவள் “என் கணவர் எங்கு சென்றாலும் என்னை கூட்டி செல்ல வேண்டும் என்று, என் மேல் சிறியதாக அடிபட்டாலும் அவர் துக்கத்தில் ஆழ்ந்து போக வேண்டும்”.
தேவதை இதற்கு மேல் என்ன வேண்டும்? என கேட்டது .அவளிடம் அவள் போதும். இதுக்கு மேல எதுவும் தேவையில்லை என்றாள்.உடனே அந்த தேவதை அந்த பெண்ணை ஒரு மொபைல் போன் ஆக மாற்றியது. சாதாரண போனாக அல்ல ஐ போன் ஆக மாற்றியது.
மனுஷங்களுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை நாம் உயிரே இல்லாத போனிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நேரில் இருப்பவர்களிடம் பேசுவதைவிட போனில் பேசுவது அதிகம். சில பேர் காதில் மாட்டிக்கொண்டு சிரித்துக் கொண்டே பேசிட்டு இருப்பார்கள். அவர்களைப் பார்க்க பைத்தியம் போல் தெரியும். நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரங்களுக்கு அடிமையாகி கொண்டு வருகிறோம். மனிதர்களை நேசிக்க வேண்டும். முக்கியமாக நம் கூடவே இருக்கக்கூடிய குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், கூட வேலை பார்ப்பவர்கள், எல்லோரையும் நேசிக்க வேண்டும்.