• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 26, 2024

முயற்சி வரிகள்

முயற்சி என்பது விதை
போல அதை விதைத்துக்
கொண்டே இரு விதைத்தால்
மரம் இல்லையேல்
நிலத்திற்கு உரம்.

உன் முயற்சிகள் உன்னை
பல முறை கைவிட்டாலும்
நீ ஒரு போதும் முயற்சியை
கைவிடாதே.. முயற்சி தான்
உனக்கான வெற்றியை
உன்னிடம் அழைத்து வரும்.

முயற்சியும் பயிற்சியும்
உன்னிடத்தில்
இருக்குமானால்
உன்னுடைய இலக்கினை
உன்னால் அடையமுடியும்.

வெற்றியின் ரகசியம்
உன்னில் நீ நம்பிக்கை
வைத்து விடாமுயற்சி
செய்வது தான்.

வாழ்க்கையில் நீ
உயரத்தை அடைவதும்
ஒன்றும் இல்லாதவனாக
இருப்பதும் உன் முயற்சியில்
மட்டுமே தங்கி இருக்கின்றது