• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 22, 2024

பொன்மொழிகள்

1.”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.”

2. “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.”

3. “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.”

4. “ஒருபோதும் உங்களை நியாயப்படுத்திக் கொள்ள பிறரை காயப்படுத்தி விடாதீர்கள்.”

5. “தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள் இருக்கும்.. ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் வெல்ல முடியும்.”

6. “உங்களது அனைத்து உழைப்பையும் கடைசி நேரத்தில் கைவிட்டால் உலகம் உங்களை ஒருபோதும் அறியாது.”

7. “விதியின் சதிகளை தாங்கிக் கொள்வது தான்.. அதை வெற்றி கொள்வதற்கான வழி.!”

8. “ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம் என்ற வலிமையான காரணம் வேண்டும்.. அப்போது தான் நம் லட்சிய பாதையில் இருந்து விலகி செல்ல மாட்டோம்.!”

9. “உன் பார்வையும் சிந்தனையும் ஒன்றிணைந்து செயல்பட்டால் உன் வாழ்க்கை பெரிய உயரத்தை அடையும்.!”

10. “ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!”