ஆன்மீக சிந்தனைகள்
1. கல்லைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் மூழ்கி முத்தை எடுத்து மகிழ்வதைப்போல, வைராக்கியத்தைக் கொண்டு இதயக்கடலுள் மூழ்கி ஆத்மா என்னும் முத்தை அடைதல் வேண்டும்.
2. விதி என்பதென்ன? இறைவனைச் சரணடையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்?
3. நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ சாட்சியாக இரு. நான் என்று கூறிக்கொண்டு எதிலும் முன் நிற்காதே.
4. உலகம் மெய் என்ற அபிப்ராயத்தை விட்டொழிக்காவிட்டால் மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.
5. மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே இருப்பதுதானேயன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று.