கடவுள் பற்றிய பொன்மொழிகள்
1. கருணை நிறைந்த செயல்களே இறைவனை கவரும்..!
2. தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு.
3. கல்லில் மட்டும் கடவுள் இருப்பதாக கருத வேண்டாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் கடவுளின் வடிவமே.
4. தெய்வமே துணை என்று இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் கடமையாற்றுவதில் கண்ணாக இருப்பர்.
5. உள்ளத்தை கடவுளுக்குப் பலியாக கொடுத்து விடுங்கள். அதுவே சிறந்த யாகம்.
6. இறைவனை முழுமையாக நம்பு.. உண்மையை மட்டும் பேசு.. உனக்கு எதிலும் வெற்றியே உண்டாகும்.
7. பக்தி பக்குவம் அடையும் போதுதான், தெய்வம் கேட்ட வரத்தைக் கொடுக்கும்.
8. சுயநலத்தை விடு, தெய்வத்தை பூரணமாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயத்தைப் பின்பற்று.
9. நம்முடைய விருப்பப்படி உலகில் எல்லாம் நடப்பது இல்லை. தெய்வத்தின் விருப்பப்படியே உலகம் இயங்குகிறது.
10. உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே மனம் தைரியமாக இருக்கும். தைரியம் இருந்தால் மட்டுமே உண்மையான பக்தி ஏற்படும்.