• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது 

Byவிஷா

Mar 5, 2024

சிந்தனை துளிகள்

1. ஆசைகளும், கஷ்டங்களும் இருந்தாலும், பிரார்த்தனையை முழுமையாக நம்புங்கள். பிரார்த்தனையால் ஊடுருவிச் செல்ல முடியாத உறுதியான கோட்டையைக் கட்ட முடியும்.

2. மனிதனின் கற்பனைக்கு எட்டாதவராக விளங்குகிறார் கடவுள். ஆனால் அவர் வாழும் உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3. மனித முயற்சியைத் தெய்வீகத் திருவருள் தாங்கி நிற்க வேண்டும். அப்பொழுது தான் இறையருளை பெறுவது சாத்தியப்படும்.

4. சமயம் மற்றும் தத்துவத்தைக் கடைப்பிடித்து ஆன்ம ஞானத்தை அடையுங்கள்.

5. மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர், தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். உலகில் நம் கவனத்தை எவரும் வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஒரு ஆண்டவன் இருக்கிறார். உண்மையில் உங்களை கவனிப்பது அவர் தான் என்பதை மறக்கக்கூடாது.

6. பழி வாங்கும் எண்ணத்தை கைவிடுங்கள். தீயவர்களும் மனம் திருந்தும்படி பிரார்த்தனை செய்யுங்கள்.

7. பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சத்தியத்தைக் கடைபிடிப்பவன் சித்தி பெற்று விடுவான். அவனுடைய வார்த்தைகள் அனைத்தும் தெய்வீக சக்தி பெற்றுவிடும்.

8. கடவுளின் திருப்பெயரைத் திரும்பத் திரும்ப சொல்வதே ஜபம். கலியுகத்தில் கடவுளை அடைய இதுவே எளிய வழி. பக்தியால் மலைகளை கூட பெயர்த்துவிடமுடியும்.

9. மக்கள் சேவை ஆற்றுபவர்கள் கைமாறாக நன்றியோ, பாராட்டோ எதிர்பார்க்கக்கூடாது. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்ற கீதையின் போதனையை மறக்கக்கூடாது.

10. ஆண்டவன் எங்கோ இருப்பதாக எண்ணாதீர்கள். உங்கள் இதயக்குகையில் அவனை நிலைநிறுத்துங்கள். வாழ்நாள் முழுவதும் அவனுக்கு வழிபாடு செய்யுங்கள். அவனை நாடி வேறு இடம் செல்ல வேண்டாம்.