1. தோல்வி மனச்சோர்வை
தருவதில்லை.. மாறாக
ஊக்கத்தையே தருகிறது.
2. தவறு செய்வதில் பிழையில்லை..
ஆனால் தவறு செய்வதை
அறிந்த பின்னர் அதை
திருத்திக் கொள்ளாமல் இருப்பதுதான்
பெரிய தவறு.
3. நம்மை அறிமுகப்படுத்துபவை
நம் வார்த்தைகள் அல்ல..
நமது வாழ்க்கையே.!
4. வீரர்களின் லட்சணம்
அகிம்சை.
5. அகிம்சையைப் பின்பற்றும் போது
நாம் துன்பத்தை மகிழ்ச்சியோடு
ஏற்றுக் கொள்கிறோம்.
6. மற்றவர்களை வெல்ல என்னிடம்
அன்பை தவிர வேறொரு
ஆயுதம் இல்லை.
7. எப்போதும் உண்மையை மறைக்காது
சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
8. வாய்மை வரலாற்றையும்
கடந்து நிற்கும்.
9. வீரம் உடலின் ஆற்றல் அல்ல
உள்ளத்தின் பண்பு.
10. சந்தேகம் எனும் காயத்தை
விவாதங்களினாலும் விளக்கங்களினாலும்
குணப்படுத்த முடியாது.