சிந்தனை துளிகள்
1. பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை.
2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள்.
3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர்.
4. அதிகாலையில் எழுந்து பிரார்த்தனை செய்வது அன்றாட கடமையாகட்டும்.
5. கடவுள் ஒரு செயலையும் செய்வதில்லை. ஆனால், அவனின்றி உலகில் ஓர் அணுவும் அசைவதில்லை.
6. எப்போதும் கடவுள் சிந்தனையில் மனம் லயித்துவிட்டால், சுயநல எண்ணம் சிறிதும் உண்டாகாது.
7. வெறுமனே கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது ஆன்மிகம் ஆகாது. அது கடவுளோடு இரண்டறக் கலப்பதாகும்.
8. எப்போதும் கடவுள் சிந்தனையில் ஆழ்ந்திருங்கள். அன்புடன் சமூகசேவை செய்யுங்கள். அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். தெய்வீகவாழ்வுக்கு இவையே தேவை.
9. தினமும் தெய்வீக நூல்களை சிறிது நேரமாவது படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
10. ஆன்மிகத்துறையில் விரைவாக முன்னேற அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள்.