• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 23, 2023

தத்துவங்கள்

1. உயர்ந்த நோக்குடன் வாழ்ந்தால் மனம் மட்டுமில்லாமல் உடம்பும் புனிதம் பெறும்.

2. முதலில் குடும்பத்திற்கு சேவை செய்யுங்கள். அதன்பின் பொதுசேவையில் ஈடுபடுங்கள்.

3. பொருள் இல்லாதவனை ஏழை என்று உலகம் எண்ணுகிறது. உண்மையில் ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.

4. துன்பத்திற்குக் காரணமான தீய ஆசை ஒழிந்தால், வாழ்வு பலாச்சுளையாக இனிக்கும்.

5. பொருளை இழப்பது மட்டும் தியாகம் அல்ல. ஆசைகளை அழிப்பதே தியாகம்.

6. இன்பமும் துன்பமும் ஒவ்வொரு செயலிலும் இணைந்தே இருக்கிறது. ஆனால் அதன் விகிதாச்சாரம் மட்டும் மாறுபடும்.

7. துன்பத்தைக் கண்டு சோர்வடைய வேண்டாம். நெருப்பில் இட்ட தங்கமே அணிகலனாக ஒளி வீசும்.

8. வாழ்வில் குறுக்கிடும் சிரமத்தை கண்டு கலங்குவதால் பயனில்லை. அது தரும் பாடங்களை மறப்பது கூடாது.

9. போலி ஒருநாளும் உண்மையாகாது. வேடம் கலைந்தால் உண்மை உலகிற்கு தெரியவரும்.

10. எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக இருப்பது சிறப்பு. ராமன் என்று பெயர் இருப்பதை விட ராமனாக வாழ்வது சிறந்தது.