• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நமது அம்மா ஆசிரியர் ராஜினாமா

ByA.Tamilselvan

Jun 29, 2022

நமது அம்மா ஆசிரியர் மருது அழகுராஜ் ராஜினாமா செய்துள்ளார். ஒற்றை தலைமை மோதலே இதற்கு காரணம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா ஆசிரியர் பொறுப்பிலிருந்து மருது அழகுராஜ் விலகியுள்ளார்.இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “நதிகாக்கும் இரு கரைகள் என்னும் என்போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்துவிட்டது”. இந்நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமைக்கான மோதல் நீடித்து வரும் நிலையில் மருது அழகுராஜ் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.