கடந்த 21.10.2004 நமது www.arasiyaltoday.com ல் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர் என்ற தலைப்பில் வெளியான செய்தி தொடர்பாக மேற்படி நிகழ்வில் சம்பந்தப்பட்ட ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் பாலாஜி இருவரின் சார்பாக, நமது நிறுவனத்திற்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடந்த 21.10.2024 அன்று வெளியிடப்பட்ட செய்தி… ஒரு தலை பட்ச செய்தியாக இருப்பதாகவும், தவறான முறையில் செய்தி உள்ளதாகவும், உண்மைக்கு புறம்பாக சம்பவம் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வழக்கறிஞர் அறிவிப்பில் அவர்களது தரப்பு விளக்கமாக சுகுமாரனின் மகன் சரத்குமார் என்பவர் தான் சர்ச்சைக்குரிய இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், முறைகேடான ஆவணங்கள் தயாரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது சட்ட உரிமையை தடுப்பதாகவும், தங்களது உரிமையை நிலைநாட்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் காவல்துறையை நாடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல் காவல்துறை எந்தவித அராஜக நடவடிக்கையும் ஈடுபடவில்லை என்றும் அவர்களது தரப்பாக தெரியப்பட்டுள்ளது. தவறு செய்யும் சுகுமாரன் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்த செய்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்த முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது செய்தி நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்படுவது என்னவென்றால்.., முறையான முன் விசாரணை மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு செய்திகள் வெளியிடப்படுகிறது என்றும் யார் மீதும் தவறான செய்தியையோ அல்லது யாரையும் களங்கப்படுத்தும் நோக்கமோ, புண்படுத்தும் எண்ணமோ இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பத்திரிககை தர்மத்தை என்றென்றும் நிலைநாட்டும் நிலையில் நமது தாழை நியூஸ் & மீடியா நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
– ஆசிரியர் –