• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுகவில் இணைந்த மற்ற கட்சி நிர்வாகிகள்..,

ByS. SRIDHAR

Jun 10, 2025

கந்தர்வகோட்டை ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் 20க்கு மேற்பட்டோர் அந்த கட்சியிலிருந்து விலகி அஇஅதிமுக பொதுச்செயலாளர், புரட்சிதமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமையேற்று முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்களின் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

கந்தர்வகோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் ஆகியோரது ஏற்பாட்டில் பேரில் பிஜேபி மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் RSK.அருண், திமுக ஆதிதிராவிடர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சௌந்தர்ராஜன், அதேபோல் அண்டனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், நீர் பாசன சங்க தலைவரும், மாவட்ட திமூக விவசாய அணி துணை அமைப்பாளர் முருகையா, திமுக கிளை கழகப் பிரதிநிதி தர்மராஜ், அ.ம.மு.க சமுத்திரம் கிளைச்செயலாளர் சுந்தரம், திமுக கிளைச் செயலாளர் கருணாநிதி, திமுக பிரதிநிதி பாண்டியன், அதேபோல் திமுகவைச் சேர்ந்த பிரபாகரன், பெரியைய்யா, சண்முகவேல் அலெக்ஸ்,உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் அந்த கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

புதிதாக இணைந்த அனைவருக்கும் அதிமுக வேட்டி அணிந்து முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வரவேற்றார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், கார்த்திக் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.