• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க உத்தரவு

Byவிஷா

Mar 20, 2025

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோடைக்கால தண்ணீர்பந்தலை திறக்க கட்சி நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கோடை காலம் தொடங்கிவிட்டதை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் போன்றவற்றை ஏற்படுத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றன.
அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பிலும் கோடை கால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு, கட்சியின் நிர்வாகிகளுக்கு விஜய் அன்புடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து, பொதுச் செயலாளர் ஆனந்த் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கழகச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கோடை வெயிலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் சார்பில் தங்கள் மாவட்டங்களில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம், பேரூர், பகுதி, வார்டு மற்றும் வட்டம் போன்ற அனைத்து இடங்களிலும் தண்ணீர் பந்தல் அமைத்து, பொதுமக்களின் தாகத்தை தணிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
முக்கிய நிர்வாகிகள் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர்கள் அமைத்துள்ள தண்ணீர் பந்தலில் தினந்தோறும் தண்ணீர் இருக்கிறதா என்பதை தவறாமல் கவனித்து, செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.