• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்-ன் ட்வீட்….

Byகாயத்ரி

Jul 5, 2022

ஓபிஎஸ்- ன் இளைய மகனான ஜெயபிரதீப் பரபரப்பு ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் எனவும் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டுமென்று அதிமுக உண்மை தொண்டர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓபிஎஸ் மகனின் இந்த ட்விட்டர் பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.