உச்சநீதிமன்ற தீர்ப்பு தனக்கு பாதகமாக வருமானால் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக தற்போது வரை நீதிமன்ற தீர்ப்புகள் இபிஎஸ்க்கு சாதகமாகவும், ஓபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளன. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் இன்னும் சட்டப்போராட்டம் தொடர்ந்து வருகிறது. பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளார் ஓபிஎஸ். இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு தனக்கு பாதகமாக வருமானால் ஒன்று சசிகலா தரப்புடன் இணைந்து தனிக்கட்சி தொடங்குவது, அல்லது தனது ஆதரவாளர்களுடன் பாஜவில் ஐக்கியமாவது என்று இரண்டு விதமான ஆலோசனையில் இருக்கிறாராம் ஓபிஎஸ்.
பாஜகவில் இணையும் ஓபிஎஸ்? பரபரப்பு தகவல்
