• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஓ.பி.எஸ். இருக்கை விவகாரம்- நாளை பதில் அளிப்பேன்- சபாநாயகர்

ByA.Tamilselvan

Oct 17, 2022

ஓபிஎஸ் இருக்கை விவகாரம் தொடர்பாக நாளை சட்டமன்றத்தில் தான் தெரிவிக்க முடியம் என சபாநாயகர் அப்பாவு பேட்டி.
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.தமிழக சட்டசபை கூட்டம் இன்று முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.
சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் ஜெ.மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை நாளை பேரவையில் வைக்கப்படும். இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும்என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக தரப்பில் 5 கடிதங்கள் தரப்பட்டுள்ளன. அக்கடிதங்களுக்கான பதிலை பேரவையில் தான் சொல்ல முடியும்.அலுவல் ஆய்வுக்குழுவில் உறுப்பினராக இருப்பதால் ஓபிஎஸ் இன்று கூட்டத்தில் கலந்து கொண்டார் என விளக்கமளித்தார்.