ஓ.பன்னீர்செல்வம் நிதானமாக அரசியல் நகர்வுகள் மேற்கொண்டிருக்கலாம்.
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நிலவும் கருத்து மோதல் குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர்,

“நயினார் நாகேந்திரன் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. தலைவர்கள் பொய் பேச மாட்டார்கள். இருப்பினும், அவர்களுக்கிடையே கருத்து மோதல் உள்ளது என்பது உண்மை.
அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏதேனும் கருத்து இருந்தால், அதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஆனால் ஒருவரை குற்றம் சாட்டுவதை பா.ஜ.க. வை சார்ந்த நாங்கள் ஏற்கமாட்டோம்.

அவருடைய அரசியல் நகர்வுகள் இன்னும் நிதானமாக இருக்கலாம்,” என விமர்சித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன்,
“அதிமுக பா.ஜ.க.வுடன் இணையும்போது அதனை விமர்சித்து, பின்னர் திமுகவில் இணைவது எங்களுக்குப் புரியவில்லை. வாழ்நாள் முழுவதும் எதிர்த்த அரசியல் கட்சியில் சென்று சேர்ந்தால்தான் அது அவருக்கு ஏற்கத்தக்க அரசியல் நகர்வா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது” என்று கூறினார்.