• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மோதலை உருவாக்கவே களமிறக்கப்பட்டுள்ளார் ஓபிஎஸ்: மள்ளர் கழகம் பகீர் தகவல்

இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கவே களமிறக்கப்பட்டுள்ளார் ஓபிஎஸ் : மள்ளர் கழகம் பகீர் தகவலை வெளிப்படுத்தி வெளிப்படுத்தி உள்ளனர்.

இராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ்கனியும், பாஜக கூட்டணி கட்சி வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக சார்பில் ஜெயப்பெருமாளும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்திர பிரபா ஆகியோர் நேரடி களத்தில் உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் சுயேட்சையாக போட்டியிடும் மள்ளர் கழக நிர்வாகியான செந்தில் மள்ளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில்..,

இராமநாதபுரம் மாவட்டம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இராமநாதபுரத்தில் பாஜக ஆதரவுடன் நாடாளுமன்ற சுயேச்சை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். முதலமைச்சராக இருந்தபோது இவர் சார்ந்த சமூகத்திற்கு என்ன செய்தார்? இராமநாதபுரத்திற்கு
என்ன செய்தார்? என்பதை விளக்க வேண்டும் தற்போது ஜாதி மத மோதல்களை உருவாக்குவதற்காக இராமநாதபுரத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆகவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தேனியில் மகன் எம்பியாக உள்ளார். அங்கு தேர்தலை சந்திக்க முடியாமல் இராமநாதபுரத்திற்கு ஓடி வந்துள்ளார். மேலும் இரு சமூகங்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தி ஜாதி கலவரத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் மள்ளர் மீட்புக்களம் நிறுவனர் செந்தில் மள்ளர், தலைமை நிலைய செயலாளர், சுந்தர லெட்சுமி, மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர், கனகராஜ், பஷீர் அகமது. ஆகியோர் உடன் இருந்தனர்.