• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பிரதமரை தனித்தனியே சந்திக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் திட்டம்!!

ByA.Tamilselvan

Apr 7, 2023

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியே சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி..சென்னை வரும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில், பிரதமரின் வருகையின் போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க முதல் முறையாக நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட விசயங்களை எடப்பாடி பேச திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தற்போது வரை இருவருக்கும் நேரம் கொடுக்கப்படவில்லை என்றாலும் ஒரு சில நிமிடங்கள் தனித்தனியே சந்திக்க நேரம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.