• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ராமேசுவரத்தில் சிறப்பு ஹோமம் நடத்திய ஓபிஎஸ்

ByA.Tamilselvan

Sep 19, 2022

மீண்டும் அரசியலில் முக்கிய இடத்தை பெறுவதற்காக ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில் ராமேசுவரத்தில் 5 மணி நேரம் சிறப்பு ஹோமம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் .
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் சகல தோஷ நிவர்த்தி ஸ்தலமாக போற்றப்படுகிறது. . இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் நேற்று ராமேசுவரம் வந்து அங்குள்ள ஒரு தனியார் மடத்தில் 5 மணி நேரம் சிறப்பு ஹோமம் செய்தார். அங்கு நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிலின் வளாகத்தில் சிறப்பு ஹோமம் செய்து மூலவருக்கு ருத்ராபிஷேகம் செய்தனர். இந்த வழிபாடு பல ஜென்ம பாவங்களை போக்கும் என்றும், குடும்ப அபிவிருத்தியை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் பின்னடைவை சந்தித்துள்ளார். எனவே மீண்டும் அரசியலில் முக்கிய இடத்தை பெறுவதற்காக ஜோதிடர்களின் ஆலோசனையின்பேரில் ஓ.பன்னீர்செல்வம் இந்த வழிபாடுகளை நடத்தியதாக கூறப்படுகிறது. ராமேசுவரத்தில் வழிபாடுகளை முடித்துக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் காசிக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.