• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மோடி வருகைக்கு எதிர்ப்பு – இந்திய அளவில் வைரலாகும் பேனர்

ByA.Tamilselvan

Jul 1, 2022

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் இந்திய அளவில் வைரல் ஆகியுள்ளது.
பிரதமர் மோடிக்கு வட இந்தியாவில் ஆதரவு இருந்தாலும் தென்னிந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக தெலுங்கானா,தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களில் மோடி எதிர்ப்பு வலுவாகவே உள்ளது எனலாம். தமிழகத்திற்கு மோடி வரும் போது “go back modi” சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது. அதே போல ஜதாரபாத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைக்கப்பட்டுள்ள பேனர் இந்திய அளவில் வைரலாகி வருகிறது. அதில் பிரபல வெப் சீரிஸான “மணிஹீஸ்ட் ” பட ஹீரோக்களை வைத்து ” மிஸ்டர் மோடி நாங்கள் வங்கியை கொள்ளையடிக்கிறோம்.நீங்கள் முழு நாட்டையும் கொள்ளையடிக்கிறீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் பாஜகவின் அகில இந்திய செயற்கழு கூட்டம் நாளை தொடங்குகிறது. இதில் பங்கேற்க மோடி வரும் நிலையில் இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.