

ஹிஜாப் முறையாக அணியவில்லை எனகூறி பெண்ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம் பெண் மாஷா சுமினியை ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனால் ஈரான் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. ஹிஜாப்பை எதிர்த்தும், தலைமுடியை வெட்டியும் பெண்கள் போராட்டம் நடத்தினர். பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் தெக்ரானில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். குர்திஸ்தானில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
