
ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை சேதமடைந்து இருந்த புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்படி முதலமைச்சர் காப்பீடு திட்ட நிதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டிடம் சீரமைக்கப்பட்டு, புறநயாளிகள் பிரிவு, காத்திருக்கும் வரை, கருத்தடை ஆலோசனை மையம், பரிசோதனை பிரிவு ஆகியவை ஏற்படுத்தப்பட்டு குளிர்சாதன வசதியுடன் கட்டிடம் புனரமைக்கப்பட்டது. நேற்று புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திறந்து வைத்தார். எம்.எல்.ஏ தங்கபாண்டியன், சுகாதாரத் துறை இணை இயக்குனர் மாரியப்பன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
