
இராஜபாளையம் சிஎஸ்ஐ பரிசுத்த பவுல் ஆலயம் கடந்த 65 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது இந்த சபையில் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த சபையில் மத போதகர் முறை கோட்டில் ஈடுபட்டு வருவதாக கூறி ஒரு தரப்பினர் கடந்த 15.06 2025 முதல் 22.06.2025 தேதி வரை ஒரு வார காலமாக போராட்டம் நடத்திய நிலையில் சி எஸ் ஐ சர்ச் விதிமுறைக்கு உட்பட்டு சபையை நடத்த வேண்டுமென மற்றொரு தரப்பினர் கடந்த 22.06.2025 தேதி முதல் மூன்று தினங்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காமராஜர் நகரில் அமைந்துள்ளது சிஎஸ்ஐ பரிசுத்த பவுல் தேவாலயம் இந்த சிஎஸ்ஐ தேவாலயத்தில் மத போதகராக ஜான் கமலேசன் இருந்து வருகிறார் இவர் திருச்சபையின் காணிக்கை மற்றும் திருச்சபை பராமரிப்பில் முறையீடு செய்ததாகவும் திருச்சபை நிர்வாகிகள் தேர்வில் தனக்கு வேண்டிய ஆதரவார்களே தேர்ந்தெடுத்ததாகவும் கூறி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு வார காலமாக திருச்சபையைச் சார்ந்த ஒரு பிரிவு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22.06.2025 திருச்சபை போதகர் இல்லாமல் போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து ஒருவரை அழைத்து சபையை நடத்தியதாக கூறி திருச்சபையில் மற்றொரு பிரிவினர் கடந்த மூன்று தினங்களாக திருச்சபை வாசலில் அமர்ந்து பாட்டு பாடி ஜெபம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஎஸ்ஐ திருச்சபையில் உள்ள விதிகளின்படி சபை நடத்த வேண்டும் மத போதகரை மாற்ற வேண்டுமானால் நீதிமன்றமோ அல்லது திருச்சபையின் உயர்மட்ட குழுவைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு திருச்சபை வழிபாட்டுக்கு இடையூறாக செயல்படக்கூடாது என ஒரு பிரிவினர் கடந்த மூன்று தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
