• Fri. Apr 26th, 2024

இந்தியாவிலேயே பெரிய விளையாட்டு மையம் திறப்பு விழா

இந்தியாவிலேயே பெரிய அரங்கு குத்துச்சண்டை, MMA, UFC போட்டிகளை நடத்தும் விளையாட்டு மையம் திறப்பு விழா நேற்று மதுரவாயலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த அரங்கினை குத்து விளகேற்றி ஜாங்கிட் ஐபிஎஸ் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக விருந்தினர்களாக கனல் கண்ணன், சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அறியப்பட்ட பீடி தாத்தா என்கிற கஜபதி மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி. மற்றும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த மிகப்பெரிய அரங்கத்தின் நோக்கம் அவர்கள் கூறியதாவது
மல்யுத்தம், ஜூடோ, ஜிஜீசு போன்ற சண்டைகள் ஒருவரைத் தாக்காமல் கை கால்களால் லாக் செய்து வீழ்த்தும் கடினமான போர்க்கலை விளையாட்டுகளை தேசிய, சர்வதேசிய அளவில் சாதித்த இந்தியாவின் தலைசிறந்த வீரர்களின் மூலம் செய்து காட்டப்பட்டது. மற்றும் காக்ஸிங் கிட் பாக்ஸிங் மோய்தாய் பாக்ஸிங் போன்ற உலகின் கடினமான தாக்குதல் மூலம் பல உத்திகளைக்கொண்டு தாக்கி வெல்லும் தலைசிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இவை அனைத்தையும் உள்ளடக்கிய மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் (MMA) கலை புரபஷனல் வேர்ல்டு சாம்பியனும் குத்துச்சண்டை வீரருமான பாலி சதிஷ்வர் இந்தியாவில் பெரிய விளையாட்டு மையத்தை சென்னை மதுரவாயலில் தொடங்கியுள்ளார். இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து தனியார், அரசு சார்ந்த குத்துச்சண்டை மற்றும் எம்எம்ஏ போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்தியாவிலேயே பெரிய அளவில் சென்னையில் எம்எம்ஏ உள் அரங்கு பயிற்சி மையத்தை சர்வதேசப் போட்டியாளர் பாலி சதிஷ்வர், சிலர் கூட்டு முயற்சியில் 7500 சதுர அடியில் சென்னை மதுரவாயலில் முதல்முறையாக ஒரு சர்வதேசத் தரத்துடன கூடிய அரங்கை உருவாக்கியிருக்கிறார். இங்கு எம்எம்ஏ, மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக்கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து தமிழகத்தில் உள்ள ஆர்வமுள்ள இளைஞர்களையும் இளைஞிகளையும் சிறந்த சர்வதேச சாம்பியன்களாக உருவாக்க வேண்டும் என்கிற கட்டடமைப்புடன் கூடிய இந்த ஜிம்மை அடங்கிய உள் அரங்கை உருவாக்கியிருக்கிறார். இதில் வருங்காலங்களில் தமிழக இளைஞர்கள் வீர விளையாட்டுகளில் சாதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இங்கு இந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் மாநில அளவிலான தொழில்முறை குத்துச்சண்டை தேர்வுக்கான போட்டி நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் தொழில் முறை குத்துச்சண்டை போட்டி நடைபெற இருக்கிறது. அடுத்து கிக் பாக்ஸிங் தொழில்முறை சோம்பியன் ஷிப் போட்டியும் நடைபெறவுள்ளது. மே மாதம் எம்எம்ஏ கிக் பாக்ஸிங் சேம்பியன் ஷிப்பும் இங்கு நடைபெறவுள்ளது. மே மாதம் யுஎப்சி போட்டி நடைபெறவுள்ளது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த வீரர்களும் இந்தியாவில் உள்ள தலை சிறந்த வீரர்களும் சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் முதல்முறையாகக் கலந்துகொள் கிறார்கள். இந்த பிரேவ்லாஸ்ட் இன்டர்நேனல் உள் அரங்கில் சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டிகள் அனைத்தும் சர்வதேசத் தரத்தில் நடைபெறும். என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கிக் பாக்ஸிங் பெட்ரேஷன் ஆஃப் இந்தியா டெரேசரர் விஜேன்ந்தர் சிங். மற்றும் சர்வதேச மல்யுத்த வீரர் ராம் பர்வஷ் .மேலும் தமிழ் நாடு ஜுடோ சங்க பொதுச் செயலாளர் சதிஷ் மற்றும் தென்னிந்தியாவின் ஜுடோவின் தந்தை சி.எஸ். ராஜகோபால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மல்யுத்தம் மற்றும் ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளை அங்கு பயிலும் மாணவர்கள் செய்து காண்பித்தனர் அதை பார்ப்போர் வியக்கும் வண்ணம் இருந்தது.

https://sendgb.com/oJLI8rste74

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *