கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் புதிதாக தொடங்கப்பட்ட ஆவின்பால் பொருட்கள் விற்பனை நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ், தமிழக வணிக கழகத்தின் தலைவர் சுரேஷ்ராஜன்,
ஆகியோருடன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் அழகுமீனா, துறைசார்ந்த அதிகாரிகள், ஆவின் பாலக ஊழியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

