காட்டாங் கொளத்தூர் ஓன்றியம் பெருமாட்டு நல்லூர் ஊராட்சி கிராமம் கன்னி வாக்கத்தில் தலைவர் பகவதி நாகராஜன் வீட்டிற்கே சென்று ஆன்லைன் முலம் வீட்டுவரி செலுத்தும் சேவையை மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஓன்றியத்திற்கு உட்பட்ட பெருமாட்டு நல்லூர் ஊராட்சி கிராமம் கன்னிவாக்கம் அருன் எக்ஸல் அடுக்குமாடி குடியிருப்பின் தலைவர், செயலாளர் ஆகியோர் ஆன்லைன் முலமாக வீட்டிற்கே வந்து வீட்டுவரியை பதிவு செய்யுமாறு ஊராட்சி தலைவர் பகவதி நாகராஜன் கேட்டு கொண்டதற்கு ஏற்ப அருன் எக்ஸல் அடுக்குமாடி குடியிருப்புக்கு தலைவர் பகவதி நாஜராஜன் மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுடன் சென்று ஆன்லைன் முலமாக வீட்டு வரிகளை பதிவு செய்யும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து வீட்டுவரி கட்டும் மக்களுக்கு அதற்காக ரசீதுகளை வழங்கினர்.


இது குறித்து தலைவர் பகவதி நாகராஜன் பேசுகையில்..,
தமிழக முதலமைச்சரின் மக்களை தேடி என்ற திட்டத்தின் கீழ், இந்த ஆன்லைன் சேவைகளை செய்து கொண்டு வருவதாகவும், தமிழக முதலமைச்சரின் கீழ் நாங்கள் வேலை பார்பவர்கள். எனவே அவரின் வழிகாட்டுதலின்படி, மக்களுக்காக அவர்கள் கேட்டபடி, இந்த ஆன்லைன் வரி கட்டும் சேவையை துவக்கி உள்ளோம். இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தலைவர், செயலாளர்களுடன் இணைந்து இனி வரும் காலங்களில் எங்கள் சேவை தொடரும் கூறி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.










