• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓர் ஆண்டுகால ஆட்சி…மனநிறைவுடன் முதல்வர் ஸ்டாலின்…

Byகாயத்ரி

May 11, 2022

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டன. அதில் பெரும்பான்மையான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதன்பிறகு மே 7ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் ஒரு அரசை மதிப்பிடுவதற்கு ஓராண்டு காலம் என்பது போதுமானது அல்ல என்றாலும் அடுத்த நான்கு ஆண்டுகளில் அந்த அரசு செல்லவிருக்கும் திசையை சுட்டி காட்டுவதற்கான சமிக்கை ஓராண்டில் நிச்சயமாக நம்மால் கவனிக்க முடியும். அதன்படி தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

அதனை அக்கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்நிலையில் ஓர் ஆண்டு கால ஆட்சி என்பது எனக்கு அதிக மனநிறைவை அளித்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செல்ல வேண்டிய தூரம் அதிகம்,அதே நேரத்தில் சென்று கொண்டிருக்கும் வேகமும் அதிகம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.