• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒரே நாடு, ஒரே உரம் திட்டம்.. நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

ByA.Tamilselvan

Oct 16, 2022

டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் நாளை ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமரின் கிசான் சம்மான் சம்மேளன் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி நாளை காலை காலை 11:30 மணி அளிவில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 13,500 விவசாயிகளும்,1500 வேளாண் தொழில் நிறுவனத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பாரதம் என்ற ஒரே பெயரில் உரங்களை நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கு உதவியாக நிகழ்ச்சியின்போது பாரத யூரியா பைகளையும் பிரதமர் அறிமுகப்படுத்துவார். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.