• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு….

ByG.Ranjan

Sep 22, 2024

குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வரவும், எதிர்க் கட்சிகளே இல்லாத நிலையை ஏற்படுத்தவும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கையில் எடுக்கிறது என தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கத்தின் ஐந்தாவது மாநில பிரதிநிதித்துவ பேரவை விருதுநகர் தனியார் திருமண மஹால் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள விருதுநகர் வந்திருந்த விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது..,

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்து இருக்கிறேன். பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளைய தலைமுறையின் வேலை வாய்ப்பு பறிபோகின்றன. எனவே இந்த ஐந்தாவது மாநிலப் பிரதிநிதித்துவ பேரவையில் பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள். இந்த கோரிக்கையில் அனைத்தையும் மாண்புமிகு முதல்வர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக அவுட் சோசியல் என்பது கூடாது. புதிய வேலைவாய்ப்புகள் அரசு மூலமாக எடுக்க வேண்டும். ஏற்கனவே பணியாற்றிய கூடியவர்களுக்கு பண பலன்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.

அக்டோபர் இரண்டாம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியின் மதுவிலக்கு மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், இந்திய அரசுக்கும் சமகாலத்தில் முக்கியமான இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம். அரசமைப்புச் சட்டம் 47 இன் படி மதுவிலக்கு ஆலோசனை குழு படி 1954 அந்த குழு ஏராளமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்திய இந்திய ஒன்றிய அரசே மதுவிலக்கு கொள்கையான இந்திய ஒன்றிய அரசு மதுவிலக்கு தொடர்பான தேசிய கொள்கையை வரையறுக்க வேண்டும். அதன் மூலம் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என அந்த குழு பரிந்துரை செய்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் விசிக நன்றி அரசிற்கு கோரிக்கை வைப்பதாகவும், தமிழக அரசும் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைப்பதாகவும், விடுதலை சிறுத்தை கட்சி நடத்தும் மாநாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பார்கள் எனவும், பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதா என பாஜகவினர் பதிலளிக்க வேண்டும். குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பது காங்கிரஸ் கட்சி இருக்கும் பொழுது கொண்டு வந்தது. பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதற்கு பாஜக காரணம் இல்லை. இந்த மாநிலங்களைத் தவிர, பாஜக ஆளும் எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு அமளி இல்லை மதுவால் பாதிக்கப்படுவது பெரும்பாலான இந்துக்கள் தான் இந்துச் சமூகத்தின் பாதுகாவலர் என கூறும் பாஜக இளம் தலைமுறையைச் சார்ந்த இந்து சமூகத்தினரை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு மீது பழி போட்டுவிட்டு மத்திய ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருப்பது மக்கள் மீது உள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறதா என கேள்வி எழுவதாகவும், தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்தாலும் அரசுக்கு நெருடலை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சனையை கூட்டணியில் இருந்து கொண்டே நாங்கள் கையில் எடுத்துள்ளதை பாஜக பாராட்ட வேண்டுமே தவிர இதை அவர்கள் கேலி செய்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் நோக்கம் மக்கள் நலன் அல்ல திமுக கூட்டணியை பிளவுபடுத்துவது பாஜக ஆட்சிக்கு வந்தால் தம் ஈழத் தமிழர்கள் மீதும் மீனவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என சிலர் நம்பியதாகவும் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் பாஜக ஆட்சியில் இருந்தும் தமிழக மீனவர்களை பாதுகாக்க பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஈழத்தமிழர்கள் பிரச்சினையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மீனவர்கள் பிரச்சினையும் ஈழத்தமிழர் பிரச்சினையும் எப்படி இருந்ததோ அதேபோல இதை தற்போதும் இருப்பதாகவும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜக அரசியல் செயல் திட்டங்களில் ஒன்று இது மிகவும் ஆபத்தானது குடியரசுத் தலைவரின் ஆட்சி முறையை கொண்டுவர பாஜக இணைப்பதாகவும் எதுக்கு ஜி இல்லாத தேசத்தையும் ஒரு கட்சி ஒரு ஆட்சி என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுவதாகவும் இதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.