
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேமுதிக கட்சியின் சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட பொருளாளர் வக்கீல் ரவிச்சந்திரன் தலைமையில் நகரச் செயலாளர் அசோகன். ஒன்றிய செயலாளர் சமுத்திர பாண்டி. சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம். நகர பொருளாளர் அழகர் ராஜா. முன்னிலையில் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் அவரது பெயருக்கு அர்ச்சனை செய்து விளக்கு போட்டு சாமி கும்பிட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாசகராஜா. ஒன்றிய துணைச் செயலாளர் பாண்டி. மகளிர் அணி நகரச் செயலாளர் சித்ரா. ஒன்றிய செயலாளர் பாண்டியம்மாள். 14 வது வார்டு கிளைச் செயலாளர் ராமர். ஆண்டிச்சாமி. இளங்கோவன். காசிமாயன் கலந்து கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்தனை செய்தனர்.

