• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

விஜயகாந்த் 20ஆம் ஆண்டு கட்சி துவக்க விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!

ByG.Suresh

Sep 22, 2024

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் 20ஆம் ஆண்டு கட்சி துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்! உற்சாகமாக கண்டு களித்த ரசிகர்கள்!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூர் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் 20ஆம் ஆண்டு கட்சி துவக்க விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயத்தை மாவட்ட கழக செயலாளர் திருவேங்கடம், உயர் மட்டக்குழு உறுப்பினர்களான ஜாகிர் உசேன், பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் மற்றும் கழக நிர்வாகிகள் துவங்கி வைத்தனர்.

திருப்பத்தூர்- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பெரிய மாடு சின்ன மாடு என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 14 ஜோடிகள், சின்ன மாடு பிரிவில் 40 ஜோடிகள் என மொத்தம் 54 ஜோடிகள் பங்கேற்றன. இதில் பெரிய மாடு பிரிவிற்கு 8 மையில் தூரமும், சின்ன மாடு பிரிவிற்கு 6 மையில் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் சின்ன மாடு பிரிவில் அதிக அளவில் மாடுகள் பங்கேற்றதால் இரு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர்.

விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க தொகையும், பரிசுகளும் விழா குழுவின் சார்பில் வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி போட்டியிணை காண காலை 6 மணி முதல் சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான ஆண்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் என, ஆயிரக்கணக்கானோர் உற்சாகதோடு கண்டுகளித்தனர். நடைபெற்ற விழாவில் மாவட்ட அவைத் தலைவர் அருணா கண்ணன் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானமுத்து, தர்மராஜ், செல்லக்கண்ணு ஒன்றிய கழகச் செயலாளர் ராமதாஸ், சிங்கம்புணரி நகர் கழகச் செயலாளர் சிவக்குமார், கிராம அம்பலகாரர் பார்த்திபன், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நகரக் கழக கிளைக் கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட மன்ற செயலாளர் சோணமுத்து செய்திருந்தார். தொடர்ந்து சுமார் 2000 பேருக்கு விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.