• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சி கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா..,

ByKalamegam Viswanathan

Oct 17, 2023

அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மதுரை திருப்பரங்குன்றம் 16ஆம் நாள் மண்டப பகுதியில் மதுரை புறநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்கள் படத்திற்கு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து அதிமுக கொடி கம்பத்தில் அதிமுகவின் கட்சிக்கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் நிலையூர் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.