• Sun. May 19th, 2024

சேது பொறியியல் கல்லூரியில் ஓட்டுரிமை நடைப்பயணம்.

Byகுமார்

Mar 9, 2024

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரி தேசிய சேவை திட்டம் கலகம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் சார்பாக ஓட்டுரிமை முக்கியத்தை போற்றும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு நடை பயணம் நடத்தப்பட்டது. கல்லூரி திறந்தவெளி அரங்கத்தில் நிகழ்வு துவக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்கள் ஓட்டுரிமை முக்கியத்தை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். கல்லூரி தேர்வு துறை தலைவர் முரளி கண்ணன், அருப்புக்கோட்டை வருவாய் கோட்ட அதிகாரி வள்ளிக்கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரி தேசிய சேவை திட்ட அதிகாரி கண்ணதாசன் நன்றியுரை வழங்கினார் .
நடைப்பயணம் காரியாபட்டி பேருந்து நிலையம் வழியாக சென்று புறவழிச் சாலையை சென்றடைந்து நிறைவு பெற்றது. நடைபயணத்தில் சேது பொறியியல் மாணவ மாணவிகள் ஓட்டுரிமை பற்றிய முக்கிய தகவல்களை கையில் ஏந்தி கோஷம் எழுப்பி சென்றனர். நிகழ்வில் சேது பொறியியல் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ் .எம் .சீனி மொகைதீன், எஸ் .எம் .சீனி முகமது அலி யார் மற்றும் காரியாபட்டி காவல்துறை ஆய்வாளர் செந்தில் சேது பொறியியல் கல்லூரி சிறப்பு அதிகாரி துரைராஜ் ,கல்லூரி மக்கள் தொடர்பு அதிகாரி கணித பேராசிரியர் லக்ஷ்மணராஜ் கலந்து கொண்டனர் .
நிகழ்வினை சேது பொறியியல் கல்லூரி தேர்வுத்துறை தலைவர் முரளி கண்ணன் தலைமையில் கல்லூரி தேசிய சேவை திட்ட அதிகாரி கண்ணதாசன் பேராசிரியர்கள் கார்த்திகேயன், மீரான், தமிழ் பிரியன், ஷேக் மைதீன் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *