• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்…

ByKalamegam Viswanathan

Nov 12, 2023

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் ஆண்டுதோறும் தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை, உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் பக்தர்கள் அதிகளவு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஒவ்வொரு மாதமும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்., இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஐந்து முப்பது மணிக்கு எல்லாம் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் சார சாரையாக வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.

தீபாவளி நாளான இன்று பக்தர்களுக்கு கூட்டம் அலை மோதுவதால் திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ளது.