• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..!

Byகுமார்

Sep 21, 2021

பிரதமர் மோடி பிறந்த நாள் முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வடக்கு ஒன்றியம் சார்பாக, அம்பேத்கார் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், மேற்கு மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன்ஜி, வடக்கு ஒன்றிய செயலாளர் சிவசக்தி ஆகியோர் இனிப்பு வழங்கினர்.

பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், மேலப்பாட்டம் கரிசல் குளம் ஊராட்சியில் பணியாற்றும் 25 துப்புரவு தொழிலாளர்களுக்கு அரிசி பைகள் மற்றும் மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டது. மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் மணிமாறன், முத்துகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றிய சிவசக்தி செய்திருந்தார்.