• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அன்று தி.மு.க. ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்ப்பு.. இன்று அல்லல்படும் மீனவர்கள்.., தேவகோட்டையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

அன்று கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது மவுனமாக இருந்ததால் இன்று அவர்கள் நமது மீனவர்களை கைது செய்கின்றனர் – தேவகோட்டையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அதிமுக அமைப்பு தேர்தலில் இவர்களிடம் விருப்ப மனுக்களை சிவகங்கை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது..,


இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு காரணம் காங்கிரஸ் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததுதான் என குற்றம்சாட்டினார். தொடர்ந்து, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் செய்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

பொய் சொல்லுவது என்பது திமுகவிற்கு கைவந்த கலை என்ற ஆர் பி உதயகுமார், 50 கோடி செலவழித்தாலும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறப் போவதில்லை என்ற சி.வி. சண்முகம் கூறியிருப்பது எனக்கு தெரியாது. அவர் மூத்த சட்ட அமைச்சர். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது என்றார்.

ஓமைக்ரான் தொற்றை தடுக்க மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல், மக்களை திசை திருப்புவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது என்றும், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.