• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க, உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிப்பு..!

ByKalamegam Viswanathan

Jan 9, 2024

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கி உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – நிறுவனத் தலைவர் – சா.அருணன்
“தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மிக சிறப்பாக கொண்டாட ரூ.1000 -யுடன் பொங்கல் தொகுப்பு அடங்கிய பரிசு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்று நன்றியைத் தெரிவித்து கொள்கிறது. அதேநேரத்தில் அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ 1000 வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்தோம்.

அதாவது அரசு ஊழியர்கள் வீடுக்கட்ட கடன் பிள்ளைகளின் கல்விக்கடன் உட்பட பல சுமைகளை கடந்து தான் குனும்பத்தை நடத்துகிறார்கள் என சுட்டிக்காட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பை வழங்கிட இந்தியாவின் முன்மாதரி முதலமைச்சராக திகழும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். அதனை கனிவுடன் ஏற்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ . 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறு உருவம் இந்தியாவின் முதன்மை முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு ஊழிர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.